இஸ்ரேலுடன் ட்ரம்பின் ஈரான் போரை அமெரிக்கர்கள் ஆதரிக்கிறார்களா? வெளியான உண்மை நிலவரம்

Donald Trump Iran Middle East
By Arbin Mar 01, 2026 11:00 PM GMT
Report

இஸ்ரேலுடன் இணைந்து ட்ரம்ப் முன்னெடுக்கும் ஈரான் போரை வெறும் 27 சதவீதம் அமெரிக்க மக்கள் மட்டுமே ஆதரிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மிகவும் அவசரப்படுவதாக

ஞாயிறன்று வெளியான ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக்கணிப்பில், ஈரான் போரை 43 சதவீத அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்றும் 29 சதவீத மக்கள் முடிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இஸ்ரேலுடன் ட்ரம்பின் ஈரான் போரை அமெரிக்கர்கள் ஆதரிக்கிறார்களா? வெளியான உண்மை நிலவரம் | Americans Oppose Trump War

மட்டுமின்றி, அமெரிக்க நலன்களை மீறி இராணுவ பலத்தைப் பயன்படுத்த ஜனாதிபதி மிகவும் அவசரப்படுவதாக அமெரிக்கர்களில் பாதி பேர் நம்புவதாகவும் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 56 சதவீதம் பேர், தேவையில்லாமல் இராணுவ பலத்தை பயன்படுத்த ட்ரம்ப் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.

பெரும்பான்மையான ஜனநாயகக் கட்சியினர் - 83 சதவீதம் பேர் - ட்ரம்ப் இராணுவ நடவடிக்கையை எடுக்க மிக அவசரப்படுகிறார் என தெரிவித்துள்ளனர்.

இராணுவ நடவடிக்கை ஒரு பக்கம்... மொத்த ஈரானிய மக்களையும்: இஸ்ரேலின் அதிர்ச்சி திட்டம்

இராணுவ நடவடிக்கை ஒரு பக்கம்... மொத்த ஈரானிய மக்களையும்: இஸ்ரேலின் அதிர்ச்சி திட்டம்

ஆனால் குடியரசுக்கட்சியினர் 23 சதவீதம் பேர்கள் மட்டுமே ட்ரம்ப் அவசரப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இரு கட்சியிலும் சாராதவர்கள் 60 சதவீதத்தினர் ட்ரம்ப் அவசரம் காட்டுவதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 1282 அமெரிக்கர்கள் பதிலளித்துள்ள இந்த கருத்துக்கணிப்பில், பத்தில் ஒன்பது பேர் ஈரான் போர் பற்றி குறைந்தபட்சம் சிறிதளவு கேள்விப்பட்டதாகக் கூறினர்.

4 வாரங்கள் வரையில்

சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தப் போரில் இதுவரை 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ட்ரம்ப் நிர்வாகம் மூடி மறைக்கிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், ஈரான் போரானது 4 வாரங்கள் வரையில் நீடிக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரை நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சியினர் வரவேற்றிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துருப்புக்களின் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தாக்குதல்களுக்காக ட்ரம்ப் நிர்வாகம் தற்போது அதிகரித்த நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இஸ்ரேலுடன் ட்ரம்பின் ஈரான் போரை அமெரிக்கர்கள் ஆதரிக்கிறார்களா? வெளியான உண்மை நிலவரம் | Americans Oppose Trump War

மத்திய கிழக்கில் இராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக நீண்டகால ட்ரம்ப் ஆதரவாளர்கள் தற்போது அவரைக் குறை கூறுகின்றனர்.

தேர்தல் பரப்புரைகளில் போர்களுக்கு எதிராக பேசி மக்கள் ஆதரவைத் திரட்டி வென்றதன் பின்னர் தற்போது, பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களை முன்னெடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எப்ஸ்டீன் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க இன்னொரு நாடு மீது குண்டு வீசுவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடியுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US