இந்தியாவில் இருந்து இந்த நாட்டவர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்! பிரபல நாடு முக்கிய அறிவுறுத்தல்
இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் நாடு திரும்ப அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக அனைத்து வகையான மருத்துவ சேவைகளை அணுகுவது கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே இந்தியாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் எவ்வளவு சீக்கிரம் வெளியேறுகிறீர்களோ அவ்வளவு பாதுகாப்பானது.
இந்தியாவை விட்டு நாடு திரும்ப விரும்பும் அமெரிக்க குடிமக்கள் இப்போது கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.