குடிபோதையில் நடந்த கொடுமை.. ஈபிள் கோபுரத்தின் உச்சியில் படுக்கை போட்ட அமெரிக்கர்கள்!
பிரான்ஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் உச்சியில் அமெரிக்கர்கள் படுத்து உறங்கியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈபிள் கோபுரம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1889ம் ஆண்டு கஸ்டவ் ஈபிள் என்பவரால் ஈபிள் கோபுரம் கட்டப்பட்டு உலக அளவில் புகழ்பெற்றது. சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் தலமாகவும் இது இருந்து வருகின்றது. இதை பார்ப்பதற்காக பலரும் பிரான்ஸிற்கு வருகை தந்துக்கொண்டே இருகின்றார்கள்.
அந்தவகையில் நேற்று அமெரிக்கர்கள் இரண்டு பேர் கோபுரத்தின் உச்சியில் படுத்து உறங்கியுள்ளனர். இது தற்போது ஒரு பேச்சு பொருளாக இருந்து வருகின்றது எனலாம்.
உச்சியில் படுத்து உறங்கியவர்கள்
ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும். திறப்பதற்கு முன்பாக கோபுரத்தில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அப்போது தான் அமெரிக்கர்கள் இரண்டு பேர் கோபுரத்தின் உச்சியில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்கள்.
அவர்கள் அதிகளவில் மது அருந்தி இருந்ததாகவும், கோபுரத்தின் பொதுவாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாத ஒரு இடத்தில் இரவு முழுவதும் உறங்கியுள்ளனர்.
கோபுரத்தின் உச்சியில் இருந்து படிக்கட்டுகளில் ஏறும்போது இருவரும் பாதுகாப்பு தடைகளைத் தாண்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் மீட்பதற்காக சிறப்பு பிரிவு உள்பட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்களுக்கு பழக்கு பதிவு செய்து, இருவரையும் விசாரணைக்காக காவல்ந நிலையத்துக்காக அழைத்து வரப்பட்டனர்.
மேலும் இந்த சம்பத்தால் க ஈபிள் கோபுரம் திறப்பதில் ஒரு மணி நேரம் தாமதமாகி திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |