வெளிநாட்டு பொலிசாரின் உதவியை நாடும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, பாரீஸில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தனது கூட்டாளர்களான நாடுகளிலிருந்து பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
மாஸ்கோ தாக்குதல்
இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 22ஆம் திகதி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மர்ம நபர்கள் நான்குபேர் திடீர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.
AP
வெளிநாட்டு பொலிசாரின் உதவியை நாடும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
இப்படிப்பட்ட ஒரு நேரத்தில், பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆகவே, ஒலிம்பிக் போட்டிகளின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பை பலப்படுத்த விரும்புகிறது பிரான்ஸ்.
அதற்காக, தனது கூட்டாளர்களான 46 நாடுகளின் உதவியை நாடியுள்ளது பிரான்ஸ். ஒலிம்பிக் போட்டிகளின்போது, பாதுகாப்புக்காக சுமார் 2,000 பொலிசாரை அனுப்பித் தருமாறு, பிரான்ஸ் தனது கூட்டாளர் நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுபோக, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம், சில குறிப்பிட்ட சிறப்புப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக, குறைந்த எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை அனுப்பித் தருமாறும் வெளிநாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |