இலங்கைக்கு எதிராக 149 ஆண்டுகளில் முதல்முறையாக..வரலாறு படைத்த இருவர்
இலங்கை எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகளின் அமிர் ஜாங்கோ இரட்டை சதம் விளாசினார்.
இரட்டை சதம்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 308 ஓட்டங்கள் குவித்தது. தனஞ்செய டி சில்வா 120 ஓட்டங்கள் எடுத்தார். கிரேவ்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில், அமிர் ஜாங்கோ (Amir Jangoo) 3 சிக்ஸர்கள் மற்றும் 19 பவுண்டரிகளுடன் 233 ஓட்டங்கள் குவித்தார்.
149 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில்
அணித்தலைவர் ரோஸ்டன் சேஸ் (Roston Chase) 194 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள்) எடுக்க, மேற்கிந்திய தீவுகள் 626 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ஜாங்கோ, சேஸ் கூட்டணி 401 ஓட்டங்கள் குவித்தது. 149 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில், 6வது விக்கெட்டில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
இலங்கை தரப்பில் மிலன் ரத்னயாகே 5 விக்கெட்டுகளும், சோனல் மற்றும் அசிதா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |