அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்..சதமடித்து அணியை மீட்ட ஜாங்கோ
Amir Jangoo second test hundred: வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்டில் மேற்கிந்திய தீவுகளின் ஆமிர் ஜாங்கோ சதம் விளாசினார்.
சில்ஹெட்டில் நடந்து வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்டில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஆமிர் ஜாங்கோ இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.
விக்கெட்டுகள் சரிவு
வங்காளதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரண்டன் கிங் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரிலேயே ஜோஷுவா டா சில்வா 12 ஓட்டங்களில் தஸ்கின் அகமது பந்துவீச்சில் வெளியேறினார்.
கவேம் ஹாட்ஜ் 1 ரன்னில் அவுட் ஆக, மேற்கிந்திய தீவுகள் அணி 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என தடுமாறியது.
ஆமிர் ஜாங்கோ
அப்போது கைகோர்த்த கெவின் விக்கம், ஆமிர் ஜாங்கோ (Amir Jangoo) கூட்டணி நிதானமாக ஆடி அணியை மீட்டது.
அரைசதம் அடித்த கெவின் விக்கம் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆமிர் ஜாங்கோ, தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தினைப் பூர்த்தி செய்தார். மழையால் போட்டி தடைபட முன்கூட்டியே முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஆமிர் ஜாங்கோ 111 ஓட்டங்களுடனும், ஜஸ்டின் கிரேவ்ஸ் 35 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
