ரூ.6 கோடி கடனாளியாக்கிய தொழில்... மீண்டு வந்து ரூ 2,700 கோடி நிறுவனத்தை உருவாக்கி சாதித்த நபர்
இந்தூர் பகுதியை சேர்ந்த Amit Kumat என்பவர் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு தற்போது சுமார் 2,700 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
சுமார் 15,000 டன் அளவுக்கு
இந்தியாவில் நொறுக்குத்தீனி சந்தை என்பது சுமார் 12,000 கோடி அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 15,000 டன் அளவுக்கு நொறுக்குத்தீனிகளை மக்கள் உட்கொள்கின்றனர்.
கடந்த 2003ல் Amit Kumat மற்றும் அவரது சகோதரர் இணைந்து இவர்கள் இருவரின் நண்பர் ஒருவருடன் பிரகாஷ் ஸ்னாக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தற்போது இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் நான்கு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
விநியோகஸ்தர்கள் மட்டும் 2,900 பேர்கள் உள்ளனர். 24 மாகாணங்களில் 168 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. தொடக்கத்திலேயே Amit Kumat நொறுக்குத்தீனி தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
ஆனால் சில ஆண்டுகள் பணியாற்றிய அவருக்கு ரசாயன உற்பத்தி தொழிலில் ஈடுபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை எழுந்துள்ளது. இதனையடுத்து நொறுக்குத்தீனி வேலையை விடுவிட்டு ரசாயனத் தொழிற்சாலை தொடங்கினார்.
சந்தை மதிப்பு ரூ 2,762 கோடி
ஆனால் அந்த முடிவு அவருக்கு பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. வெறும் ஒரு ஆண்டில் ரூ 6 கோடி கடனாளியாக்கியது. ஆனால் அந்த நெருக்கடியான சூழலில் இருந்து அவர் மீண்டுவர நொறுக்குத்தீனி தொழிலே அவருக்கு உதவியது.
2003ல் சகோதரர் மற்றும் நண்பருடன் இணைந்து பிரகாஷ் ஸ்னாக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தற்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனம் 50 சதவிகித வளர்ச்சியை எட்டி வருகிறது.
சுமார் 2.5 கோடி முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 2011ல் ரூ 260 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2022ல் ரூ 500 கோடி வருவாயை எட்டியுள்ளது. இந்தியாவின் நொறுக்குத்தீனி துறையில் 27வது இடத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 2,762 கோடி என்றே கூறப்படுகிறது.
மொத்தமாக ரூ 6 கோடி கடனாளியாக இருந்த நபர், அவருக்கு மிகவும் பரிச்சயமான தொழிலில் ஈடுபட்டு, தற்போது கோடிகளுக்கு அதிபதியாக உயர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |