விராட் கோலி இப்போதே ஓய்வு பெற வேண்டும் என கூறிய வீரர்! கொந்தளித்த ரசிகர்கள்..கிளம்பிய கடும் கண்டனம்
விராட் கோலியை ஓய்வு பெற கூறிய அப்ரிடியை விமர்சித்த அமித் மிஸ்ரா
பலமுறை ஓய்வு பெற்ற அப்ரிடி சிறந்த வீரரான கோலியை காப்பாற்ற வேண்டும் என கிண்டல் செய்த மிஸ்ரா
நல்ல ஃபார்மில் இருக்கும்போது விராட் கோலி ஓய்வு பெறுவது சரியாக இருக்கும் என ஷாகித் அப்ரிடி கூறிய கருத்துக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், கோபமும் அடைந்தனர்.
எனினும் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். அவர் ஆசியக் கோப்பை தொடரில் 286 ஓட்டங்கள் குவித்தார்.
PC: AP
கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, நல்ல ஃபார்மில் இருக்கும்போதே விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என கூறினார்.
PC: AFP / File
அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'ஃபார்மில் இல்லாதபோது கோலி அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அது நிகழ வேண்டும். ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர். விராட் கோலி அப்படி செய்யும்போது அவர் அதை ஸ்டைலாக செய்வார் . அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார் என்று உணர்கிறேன்' என தெரிவித்தார்.
அப்ரிடியின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ராவும் கோபமடைந்து ட்வீட் செய்துள்ளார்.
PC: AP
அவரது டிவீட்டில், 'அன்புள்ள அப்ரிடி, சிலர் ஒருமுறை மட்டுமே ஓய்வு பெறுகிறார்கள், எனவே விராட் கோலியை இதிலிருந்து தயவுசெய்து காப்பாற்றுங்கள்' என கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறியதற்கு காரணம் அப்ரிடி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலமுறை ஓய்வு பெற்றதால் தான்.
Dear Afridi, some people retire only once so please spare Virat Kohli from all this. ?? https://t.co/PHlH1PJh2r
— Amit Mishra (@MishiAmit) September 13, 2022