அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காணவேண்டும்: இந்திய உள்துறை அமைச்சர் உத்தரவு
இந்தியாவில் வாழும் அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காணுமாறு இந்திய உள்துறை அமைச்சர் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் உத்தரவு
இன்று, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் முதல் அமைச்சர்களுடனும் பேசிய இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, தத்தம் மாநிலங்களில் வாழும் அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காணுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானியர்கள் அனைவர் குறித்த விவரங்களையும் மத்திய அரசுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், மத்திய அரசு அவர்களுடைய விசாக்களை ரத்து செய்வதற்கு இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்திய மாநிலங்களில் வாழும் அனைத்து பாகிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதை உறுதி செய்ய, தக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் முதல் அமைச்சர்களைக் கேடுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே, SAARC விசா விதிவிலக்குத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்குப் பயணிக்க பாகிஸ்தானியர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று புதன்கிழமையன்று அறிவித்த இந்திய அரசு, அத்திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களும் 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.