MBA பட்டதாரி To கோடீஸ்வரர்.., சிறுதானியத்தில் குக்கீஸ் தயாரித்து உயர்ந்தவரின் கதை
சிறுதானிய குக்கீஸ்களை தயாரித்து பிரபலமடைந்த அமித் சோனியின் வெற்றிக்கதையை பற்றி பார்க்கலாம்.
அமித் சோனி
2023 -ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐ.நா சபை அறிவித்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் சிறுதானிய உணவுகள் பிரபலமடைய தொடங்கியது. அண்மையில், இந்திய தலைநகர் டெல்லியில் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சிறுதானிய விழா நடைபெற்றது.
இந்த விழாவின் போது தான் அமித் சோனியின் வெற்றிக்கதை உலகத்திற்கு தெரிந்தது. இவரது தயாரிப்பில் உள்ள சிறுதானிய பிஸ்கட்டுகள் கண்காட்சியில் காண்பிக்கப்பட்டன. அமித் சோனி ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார்.
இவர் தொடக்கத்தில் பிரபல சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர், 2017 -ம் ஆண்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். 2019 ஆம் ஆண்டு RD’z 1983 என்ற பெயரில் பேக்கரியை தொடங்கினார். அப்போது சிறுதானிய குக்கீஸ் தயாரித்து பிரபலம் அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, ராஜஸ்தானில் உள்ள ICAR துறையினரிடமிருந்து சிறுதானிய கேக் தயாரிக்க ஆர்டர் கிடைத்தது. முதலில், அமித்க்கு சிறுதானிய குக்கீஸ் தயாரிப்பதில் சிக்கல் இருந்தது. பின்பு, அதையெல்லாம் உடைத்தெறிந்து 97 -வது முயற்சியில் அதனுடைய சுவை கிடைத்தது.
RD’z 1983 பேக்கரி
இவரது பேக்கரி பெயரான RD’z 1983 என்பதற்கு விளக்கம் உள்ளது. அதாவது, R என்பது தந்தையின் பெயரான ரமேஷின் முதல் எழுத்தையும் D என்பது தாயின் பெயரான துர்காவின் முதல் எழுத்தையும், 1983 என்பது பெற்றோர்கள் திருமணம் செய்த வருடத்தையும் குறிக்கிறது.
சிறிய முதலீட்டில் தொடங்கிய இந்த பேக்கரியானது தற்போது ஆண்டுக்கு ரூ.1.5 முதல் 2 கோடி வரை வருமானம் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |