Swiggy -யின் பங்குகளை வாங்கிய அமிதாப் பச்சன் குடும்பம்: முழு விவரங்கள்
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பம் வாங்கியுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த நிறுவனங்கள் தற்போது பொது சந்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
Swiggy பங்குகளை வாங்கிய அமிதாப்பச்சன்
பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்தில் ஒரு சிறிய குறிப்பிடத்தக்க பங்கை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்ப அலுவலகம் வாங்கியுள்ளது.
அதாவது, ஸ்விக்கி (Swiggy) நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் ஆரம்பக் கட்ட முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்குகளை வாங்கியுள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சினிமாவை தவிர ரியல் எஸ்டேட் (Real estate) மற்றும் பங்கு சந்தை முதலீடு (Stock market investment) மூலம் அதிக வருமானம் சம்பாதித்து வருகிறார்.
அந்தவகையில், இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் (Startup company) நீண்ட காலமாகவே அமிதாப் பச்சன் முதலீடு செய்து வருகிறார்.
6 மாத கர்ப்பத்தில் ஓட்டப்பந்தயத்தில் ஓடியவர்.., ரூ.500 கோடி லாபம் கொடுக்கும் பிராண்டை உருவாக்கியது எப்படி?
முக்கியமாக அவர், டிஜிட்டல் டெக் (Digital Tech) மற்றும் தொழில்நுட்பம் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.
சமீபத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் பங்குகளை மோதிலால் ஒஸ்வால் நிதி சேவைகள் (Motilal Oswal Financial Services) நிறுவனத்தின் தலைவரான ராம்தேவ் அகர்வால் வாங்கினார்.
மேலும், ஒரு மாதத்திற்கு முன்பாக Zepto-வின் சுமார் 665 மில்லியன் டொலர் முதலீட்டு சுற்றில் பங்குகளையும் வாங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |