ரூ.120 கோடி வரி செலுத்திய நடிகர் அமிதாப் பச்சன்!
இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் (82), கடந்த நிதியாண்டில் ரூ.120 கோடி வரி செலுத்தியுள்ளார்.
உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ஷாருக் கானை விட அமிதாப் பச்சன் செலுத்தியுள்ளார்.
ஷாருக் கான் கடந்த நிதியாண்டில் ரூ.92 கோடி வரி செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்திய திரைத்துறையின் பெரும் நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன், 2024-25 நிதியாண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
இதன் மூலம் ரூ. 120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக தொடர்ந்து திகழ்கிறார்.
அமிதாப் பச்சன் வருமானத்திற்கான காரணங்கள்
நடிகர் அமிதாப் பச்சன் 82 வயதிலும், பல பாரிய திரைப்படங்களில் நடித்து, பிரபலமான பிராண்டு விளம்பரங்களில் பணியாற்றுகிறார்.
மேலும், கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் மூலம் உறுதியாக வருமானம் பெற்று வருகின்றார்.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, அமிதாப் பச்சன் மார்ச் 15, 2025 அன்று ரூ.52.50 கோடி முன் வரியாக செலுத்தியுள்ளார்.
அமிதாப் பச்சன் சொத்து மதிப்பு
அமிதாப் பச்சன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2737 கோடி என கூறப்படுகிறது.
இவரிடம் ரூ.54.77 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ. 7.66 கோடி மதிப்புள்ள 16 வாகனங்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |