அமிதாப் பச்சனின் Accountant -ஆக இருந்தவர்.. இன்று ரூ.28,000 கோடி சொத்துக்கு சொந்தக்காரர்
அன்று அமிதாப் பச்சனின் பட்டய கணக்காளராக இருந்தவர் இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பிறந்தவர் பிரேம்சந்த் கோதா. இவர் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், வணிகவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் தனது திறமையினால் பட்டய கணக்காளராக (Chartered Accountant) மாறினார்.
இதனைத்தொடர்ந்து, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் கணக்குகளை சரிபார்த்து வந்தார். அப்படியே, அவரது குடும்பத்தில் ஒருவராக மாறினார். இதன்பின்னர் தான், 1949 -ம் ஆண்டு இவர்கள் இருவர் மற்றும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஆகியோர் இணைந்து ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டு நஷ்டத்தில் இயங்கிய Ipca நிறுவனத்தை சொந்தமாக வாங்கினர்.
1975- ம் ஆண்டு அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தின் பிசினஸ் கூட்டாளியாக சேர்ந்தார். தற்போது இந்நிறுவனமானது இப்கா லேபரடரிஸ் (Ipca Laboratories) என்ற முன்னணி நிறுவனமாக இயங்கி வருகிறது.
மேலும், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.28.000 கோடி ஆகும். விவசாய குடும்பத்தில் பிறந்த பிரேம்சந்த் கோதா பெரும் பணக்காரராக வளர்ந்து நிற்கிறார்.
Ipca Labs
Ipca Labs தலைவராக இருக்கும் பிரேம்சந்த் கோதாவின் நிறுவன வருமானம் மட்டுமே அமெரிக்க டொலரில் 711 மில்லியன். இங்கு தயாரிக்கப்படும், டயாபடீஸ் மருந்துகள், மலேரியா காய்ச்சலுக்கான மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் இதய சிகிச்சை தொடர்பான மருந்துகள் ஆகியவை பிரபலமாக உள்ளதால் ஓர்டர் செய்யப்படுகின்றன.
1990 -ம் ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் தலைவராக அமிதாப் பச்சனின் சகோதரர் அஜிதாப் பச்சன் இருந்தார். ஆனால், அமிதாப் பச்சனின் குடும்பம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்ததால் 1999-ல் Ipca நிறுவனத்தில் உள்ள தங்களது பங்குகளை விற்றனர்.
இதனால், அமிதாப் பச்சனின் குடும்பத்திற்கு நிறுவனம் மீதான உரிமை பறிபோனது. இதன் பின்னர் Ipca நிறுவனத்தின் தலைவராக பிரேம்சந்த் கோதா பொறுப்பேற்று ஆண்டு வருமானத்தை ரூ.4,422 கோடிக்கு மாற்றினார். மேலும், தற்போது இவரது சொத்து மதிப்பு ரூ.10,800 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |