முடி உதிர்வைத் தடுக்க நெல்லிக்காயை எவ்வாறு பயன்படுத்துவது: முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழிகள் இதோ
நெல்லிக்காயானது முடியை பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வதை குறைக்கிறது. முடி உதிர்வைத் தடுக்கவும், உங்கள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நீங்கள் நெல்லிகாயை தேர்வு செய்யலாம்.
இதில் கால்சியம் உள்ளது, இது ஆரோக்கியமான முடியை வளர செய்கிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது.
நெல்லிக்காய் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் முடியின் இயற்கையான நிறத்தை மேம்படுத்துகிறது, முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது.
நெல்லிக்காய் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவது முதல் பொடுகுத் தொல்லையைக் குறைப்பது வரை பல வழிகளில் கூந்தலுக்கு நன்மை பயக்கும்.
ஆகவே நெல்லிக்காயை வைத்து எப்படி முடியை வளர செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நெல்லிக்காய் எண்ணெய்
பலர் உச்சந்தலையில் மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு பதிலாக நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
இது உங்கள் மயிர்க்கால்களை பலப்படுத்தி முடி உதிர்வை குறைக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பொடுகை வராமல் தடுக்கிறது. நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
முதலில் நெல்லிக்காயை மெல்லிய துண்டுகளாக செய்து 3 முதல் 4 நாட்கள் நிழலில் உலர வைக்க வேண்டும். அடுத்து, சிறிது தேங்காய் எண்ணெயை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து, அதில் இந்த காய்ந்த நெல்லிக்காய் துண்டுகளை சேர்க்கவும். இது கொதித்தவுடன், உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.
நெல்லிக்காய் மற்றும் யோகர்ட் மாஸ்க்
இரண்டு ஸ்பூன் நெல்லி பொடியில் சூடான நீர் ஊற்றி, தேன் அல்லது 2 ஸ்பூன் யோகர்ட் ஊற்றி நன்றாக கலந்து முடியில் பூசிக்கொள்ளவும். இதை 30 நிமிடம் வைத்து, பின் கழுவ வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |