முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
நெல்லிக்காய் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும், இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் சி முடிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து என்பதால் நெல்லிக்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.
இந்த எண்ணெயை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தயாரிக்கும் முறை
எண்ணெய் தயாரிக்க அரை கிலோ நெல்லிக்காய் தேவைப்படும், நெல்லிக்காயை நன்கு கழுவவும்.
இப்போது நெல்லிக்காயை அரைத்து எடுத்துக்கொள்ளவும், தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து, அதில் நெல்லிக்காய் அரைத்த சாற்றை சேர்க்கவும்.
அதில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை காய்ச்சவும், இப்போது உங்கள் நீண்ட கூந்தலுக்கான நெல்லிக்காய் எண்ணெய் தயார்.
கிடைக்கும் பலன்கள்
நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் பொடுகு பிரச்சனைகள் குணமாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நெல்லிக்காயில் காணப்படுகின்றன, இது உச்சந்தலையை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனையை தடுக்கிறது.
உச்சந்தலை சுத்தமாக இல்லையெனில் பொடுகுத் தொல்லை முதல் பூஞ்சை தொற்று வரை பிரச்சனைகள் ஏற்படலாம். உச்சந்தலையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நெல்லிக்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
வலுவான கூந்தலுக்கு நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம், நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது.
உடலில் மெலனின் குறைபாடு மற்றும் ரசாயன முடி சிகிச்சை ஆகியவை முடி நரைப்பதற்கான காரணங்கள். எனவே நெல்லிக்காய் எண்ணெய் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது.
நெல்லிக்காயில் இரும்புச்சத்து உள்ளதால் இது முடியை கருப்பாக்க உதவுகிறது. எனவே முடிக்கு சாதாரண எண்ணெய்க்குப் பதிலாக நெல்லிக்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |