இந்த ஒரு காயை தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!
நெல்லிக்காய் மருத்துவ குணங்களை அதிகம் கொண்டது. இதில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.
ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்.
நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.
சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
isha.sadhguru.org
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும்.
தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.
நெல்லிக்காய் அதன் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தால் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. நெல்லிக்காய் கட்டிகளின் வளர்ச்சியை மெதுவாக்கும் என்றும், புற்றுநோய் செல்கள் உடலில் பரவும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.
நெல்லிக்காய் சோர்வான, மந்தமான உடல்களை உற்சாகப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான தூக்க முறைகளை ஊக்குவிக்கிறது.