வெள்ளை முடி வேகமா மறையணுமா? இந்த ஒரு டிப்ஸை பின்பற்றி வந்தாலே போதும்
Hair tips
Grey hair
HairTips
WhiteHair
By Kishanthini
இன்று சிறுவயது குழந்தைகள் , பெண்கள், ஆண்கள் என எல்லாருமே இளநரை பிரச்சைனையை எதிர்கொள்கிறார்கள்.
வெள்ளை முடி என்பது மோசமான தோற்றத்தை தரக்கூடியது. வயதான காலத்தில் நரை முடி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இளவயதில் நரைமுடி வருவது மோசமானது.
நரைமுடி பிரச்சனை தொடங்கும் போதே அதை எதிர்கொள்ளவது நல்லது. நரை முடியை காணும் போதே அதை வெளியேற்ற என்ன செய்யலாம் என்பதையும் அறிவது அவசியம்.
இதற்கு உதவும் ஹேர் பேக் வகைகள் உள்ளன. தற்போது அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம்.
தேவையானவை
- மருதாணி பொடி - கால் கப் கூந்தலின் அளவுக்கேற்ப கூட்டியோ குறைத்தோ எடுத்துகொள்ளலாம்
- முட்டை - 1
- எலுமிச்சை சாறு நீர்த்தது - 2 டீஸ்பூன்
- நெல்லிக்காய் - 4 ( கூந்தலின் அளவுக்கேற்ப குறைவாகவோ அதிகமாகவோ எடுக்கலாம்)
செய்முறை
-
நெல்லிக்காயை கொட்டை நீக்கி நறுக்கி இரும்பு வாணலியில் வெறுமனே வறுக்கவும். இவை கருப்பாக மாறும் போது இறக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு ஊறவிடவும். மற்றொரு கிண்ணத்தில் மருதாணி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்துக்கு ஆக்கவும்.
- மறுநாள் நெல்லிக்காயை மிக்ஸியில் இட்டு அரைத்து அதனுடன் முட்டையை ப்ளெண்டரில் சேர்த்து நன்றாக மசிக்கவும். பிறகு நெல்லி சாறு, முட்டை கலவை அதனுடன் மருதாணி கலவையை கலந்து மீண்டும் நன்றாக கலக்கி எடுக்கவும்.
- இந்த ஹேர் பேக் பயன்படுத்தும் போது கூந்தலை சுத்தமாக வைத்திருகக் வேண்டும். கூந்தல் எண்ணெய் பசையில்லாமல் இருக்க வேண்டும். தலைக்கு தேய்த்து குளித்த பிறகு இந்த ஹேர்பேக் போட்டால் நன்றாக இருக்கும்.
- கூந்தலை பகுதி பகுதியாக பிரித்து உச்சந்தலை முதல் கூந்தல் நுனி வரை பிரஷ் கொண்டு நன்றாக தடவி விடவும். மயிர்க்கால்களில் நன்றாக படரட்டும். பிறகு ஹேர் கவர் போட்டு கூந்தலை கட்டி விடுங்கள்.
- இந்த பேக் போட்டு இரண்டு மணி நேரம் கூந்தலை அப்படியே விட்டு விடுங்கள். பிறகு மந்தமான நீரில் வெற்று நீரில் அலசி எடுக்கவும். மைல்டான ஷாம்பு போடலாம். பிறகு கூந்தலை இயற்கையாக உலர வைக்கவும்.
- வாரத்தில் இரண்டு நாட்கள் வரை இதை பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை பயன்படுத்தலாம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US