அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்வு- வெளியான முக்கிய அறிவிப்பு
Amma unavagam daily wages increased to 400 rupees- சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் அம்மா உணவக ஊழியர்களின் தினக்கூலியை ரூ.325ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு
சென்னையில் மொத்தம் 382 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு 2,848 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உணவு தயாரித்தல் மற்றும் விநியோகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு தினமும் ரூ.325 ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஊழியர்களின் மாத வருமானம் ரூ.9,750ல் இருந்து ரூ.12,000 ஆக அதிகரிக்கும்.
இதற்காக சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.7.79 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |