அமெரிக்காவில் அம்மா உணவகம்.! பட்ஜெட் விலையில் தமிழ்நாட்டு உணவு., அசத்தும் இந்தியர்
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில் பட்ஜெட் விலையில் உணவகம் நடத்தி அசத்தி வருகிறார்.
அம்மா உணவகம்
தமிழ்நாட்டில் அம்மா உணவகம் பற்றி தெரியாதவர் இருக்கமுடியாது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அவரது ஆட்சிக் காலத்தின்போது 'அம்மா உணவகம்' தொடங்கப்பட்டது. மிக குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றும் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், அம்மா உணவகம் அமெரிக்காவில் இருக்கிறது என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம் அமெரிக்காவின் நியூயார்க் அருகே உள்ள நியூஜெர்சியில் அம்மாஸ் கிச்சன் (Amma's Kitchen) என்ற பெயரில், ஜெயலலிதாவின் புகைப்படங்களுடன் கூடிய உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.
Amma's Kitchen/USA Restaurants
தமிழ்நாட்டில் இயங்கும் அம்மா உணவகம் போல, அங்கு உள்ள இந்திய உணவு பிரியர்களுக்கு பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாக இந்த உணவகம் இருப்பதாக Madrasi in NYC எனும் தமிழ் ஃபுட் ப்ளாகர் ஒருவர் தனது சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளார்.
18 டொலருக்கு அன்லிமிடெட் அசைவ உணவு
அமெரிக்காவில் வெறும் 18 டொலருக்கு அன்லிமிடெட் அசைவ உணவுகளை சாப்பிடலாம் என்றும் இந்திய உணவுகளை தேடுபவருக்கு இந்த அம்மாஸ் கிச்சன் உணவகம் நல்ல சாய்ஸ் என்றும் கூறப்படுகிறது.
இந்த உணவகத்தின் முன் பக்கத்தில் கல்யாண விருந்துக்கான டைனிங் போல ஒரு டைனிங் அமைக்கப்பட்டுள்ளதாம். வாழை இலை போட்டு அங்கு உணவு பரிமாறப்படுகிறது. பின்புறத்தில் Buffet உள்ளதாம்.
Amma's Kitchen/USA Restaurants
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொண்ட அன்பால்
தினேஷ் குமார் எனும் தமிழர் தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொண்ட அன்பாலும் மரியாதையாலும் இந்த உணவகத்தை பல இடங்களில் நிறுவியிருக்கிறார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.