திருவள்ளூர் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் வாயு கசிவு: 2 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவு விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
அமோனியா கசிவு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள கண்ணிகைபைர் பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் அண்ட் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட எதிர்பாராத அமோனியா கசிவு விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி குறைந்தது 46 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தது 7 பேருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வடமாநில தொழிலாளர்கள் என்றும், அவர்களுக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஆகிய பாதிப்புகளால் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், தொழிற்சாலையின் அளவீட்டு வால்வில்(Measure Valve) ஏற்பட்ட கோளாறே வாயு கசிவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

விசாரணை தீவிரம்
இந்த விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொழிற்சாலையில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பயன்படுத்தப்பட்டதா? விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |