சுவிட்சர்லாந்து மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள மனித உரிமைகள் அமைப்பு
மனித உரிமைகள் அமைப்பு ஒன்று சுவிட்சர்லாந்து மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இனவெறுப்பு முதல் பருவநிலை மாற்றம் வரை
Amnesty International என்னும் மனித உரிமைகள் அமைப்பு, சுவிட்சர்லாந்தில் எங்கு பார்த்தாலும் இனவெறுப்பு காணப்படுவதாகவும், கருக்கலைப்புக்கான உரிமை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சுவிட்சர்லாந்து போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உலக அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் முறையாக இல்லை என்றும் அந்த அமைப்பு சுவிட்சர்லாந்து மீது குற்றம் சாட்டியுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது பாரபட்சம்
அத்துடன், உக்ரைனிலிருந்து வந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை மற்ற புகலிடக்கோரிக்கையாளர்களை நடத்துவதைப் போல நடத்தாமல் வித்தியாசமாக நடத்துவதாகவும், அது பாரபட்சம் காட்டுவதாகும் என்றும் கூறியுள்ளது அந்த அமைப்பு.
மனித உரிமைகள் விடயத்தில் ரஷ்யாவுக்கெதிரான சுவிட்சர்லாந்தின் அணுகுமுறை கடுமையாக இருக்கும் அதே நேரத்தில், சவுதி அரேபியா மற்றும் சீனா போன்ற நாடுகளை அது கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் Amnesty International குற்றம் சாட்டியுள்ளது.