கனேடிய மக்கள் அதிகம் விரும்பும் நாடு எது... வெளிவரும் புதிய ஆய்வு முடிவுகள்
கனேடிய மக்கள் மிக அதிகமாக பிரித்தானியா மற்றும் ஜப்பான் நாடுகளை விரும்புவதாக, தனியார் நிறுவனம் ஒன்று முன்னெடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
74 சதவீத கனேடிய மக்கள்
பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளையும் சுமார் 74 சதவீத கனேடிய மக்கள் தங்கள் விருப்ப நாடுகளாக தெரிவு செய்துள்ளனர்.
@AP
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கனேடிய மக்களுக்கு ஜப்பான் மீதான சாதகமான கருத்து 4 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதகாவும், ஆனால் பிடித்தமான நாடுகள் பட்டியலில் பிரித்தானியா முதலிடத்திலேயே உள்ளதாம்.
கருத்துக்கணிப்பின் படி, 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பிரித்தானியாவை தங்களுக்கு மிகவும் பிடித்தமாக நாடு என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இளம் வயதினருக்கு பிரித்தானியா மீதான மோகம் மிகவும் குறைந்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக, 18 முதல் 34 வயதுடையோர், 34 முதல் 54 வயதுடையோர் மொத்தம் 71 சதவீதத்தினர் பிரித்தானியா தங்களின் விருப்பமான நாடு என குறிப்பிட்டுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா, மானிடோபா மற்றும் Saskatchewan பிராந்திய மக்களுக்கும் பெருமளவில் விருப்பமான நாடாக பிரித்தானியா உள்ளது.
ஜப்பான் விருப்பமான நாடு
மேலும், 18 முதல் 34 வயதுடைய கனேடிய மக்களில் நான்கில் மூவர் ஜப்பான் தங்களுக்கு விருப்பமான நாடு என குறிப்பிட்டுள்ளனர். ஐரோப்பா நாடுகளில் இத்தாலியை கனேடிய மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
@getty
அடுத்து ஜேர்மனி, தொடர்ந்து பிரான்ஸ் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 54 கனேடிய மக்கள் விருப்பமான நாடாக அமெரிக்காவை தெரிவு செய்துள்ளனர். ஆனால் 58 சதவீதம் பேர்கள் தென் கொரியாவை தங்கள் விருப்பமான நாடாக குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |