மீட்பு விமானத்தில் காபூலிலிருந்து 21 இந்தியர்களையும் மீட்டுச் சென்ற பிரான்ஸ்: யார் அவர்கள்?
காபூலிலிருந்து தன் நாட்டு மக்களை மீட்டுச் செல்லும்போது, கூடவே 21 இந்தியர்களையும் பிரான்ஸ் மீட்பு விமானம் மீட்டுச் சென்றுள்ளதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று தன் நாட்டு மக்களை மீட்பதற்காக பிரான்சிலிருந்து வந்த முதல் மீட்பு விமானத்தில், 21 இந்தியர்களும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை, இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் Emmanuel Lenain வெளியிட்டுள்ளார்.
அந்த 21 பேரும் காபூலில் பிரான்ஸ் தூதரகத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூர்க்கா படையைச் சேர்ந்த வீரர்கள் ஆவர்.
சாவைப் பார்த்து எனக்கு பயம் கிடையாது என்று ஒரு மனிதன்சொல்வானாகில், ஒன்றில் அவன் பொய் சொல்பவனாக இருப்பான், அல்லது அவன் ஒரு கூர்க்காவாக இருப்பான் என்றொரு சொல் வழக்கு உண்டாம்!
The first French evacuation flight from #Kabul yesterday included 21 Indian nationals: the elite Gurkhas who were ensuring security of the French Embassy. ????? https://t.co/OxzUYMimTV
— Emmanuel Lenain (@FranceinIndia) August 18, 2021