சாலையோர உணவகமாக தொடங்கி இன்று ரூ.8 கோடி மாத வருமானம் - வெற்றிக்கான 3 காரணங்கள்
சாலையோர உணவகமாக தொடங்கப்பட்டது, இன்று 8 கோடி வருமானம் ஈட்டு அளவிற்கு வளர்ந்துள்ளது.
அம்ரிக் சுக்தேவ்
டெல்லி - என்சிஆரின் முர்தால் பகுதியில் அமைந்துள்ள அம்ரிக் சுக்தேவ்(Amrik Sukhdev) என்ற உணவகம், பல ஆண்டுகளாக மக்கள் உணவருந்துவதற்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த உணவகம், 1956 ஆம் ஆண்டு, சாதாரண சாலையோர உணவமாக Sardar Prakash என்பவரால் துவங்கப்பட்டது.
ஒரு கூடராத்தின் கீழ் துவங்கப்பட்டு, ரொட்டி, சாதம், பருப்பு குழம்பு இப்படியான உணவுகள் மட்டும் பரிமாறப்பட்டது.

ரத்தன் டாடாவால் உத்வேகம் பெற்று ரூ.16,690 கோடி மதிப்புள்ள சாம்ராஜ்யத்தை உருவாக்கிய திறமைக்காரர் யார்?
அந்த வழியாக செல்லும் லாரி ஓட்டுனர்களே இதன் வாடிக்கையாளர்களாக இருந்தனர். கட்டிலில் அமர்ந்து திறந்து வெளியிலே உணவருந்தி சென்றனர்.
1990 ஆம் ஆண்டு, பிரகாஷின் மகன்கள் அம்ரிக் மற்றும் சுக்தேவ் தந்தையின் தொழில் இணைந்த பிறகு முன்னேற்றம் ஏற்பட்டது.
மாத வருமானம்
8 கோடி வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் நோக்கில், வட இந்திய உணவுகள் மட்டுமல்லாது தென்னிந்திய உணவுகளையும் பரிமாற தொடங்கினர்.
தற்போது, இந்த கடைக்கு தினமும் சுமார் 9,000 முதல் 10,000 வாடிக்கையாளர்கள் வருவதாகவும், இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.27 லட்சம் சம்பாதிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

ரூ 3 லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்கிய தென்னிந்தியர்... அவரது நிறுவனம் ஒன்றின் மதிப்பு ரூ 73,575 கோடி
இதன்படி, மாத வருமானம் ரூ.8 கோடியாகவும், ஆண்டு மாத வருமானம் சுமார் ரூ.100 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில், தற்போது 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வெற்றிக்கான காரணங்கள்
இந்த வெற்றிக்கு, 3 முக்கிய விடயங்கள்தான் காரணம் என கூறப்படுகிறது.
லாரி மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு இலவச அல்லது தள்ளுபடி விலையில் உணவை வழங்குவதன் மூலம் ஆரம்பகால வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதில் உரிமையாளர்கள் பணியாற்றினர்.
உணவின் தரத்தை பராமரிக்க, உரிமையாளர்கள் ஒவ்வொரு புதிய உணவையும் மெனுவில் சேர்ப்பதற்கு முன்பு ருசித்துப் பார்ப்பதை உறுதிசெய்கிறார்கள்.
இங்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வைக்கப்படுவதில்லை. 150 மேஜைகளை கொண்ட இந்த உணவகத்தில், ஒரு மேஜைக்கு 45 நிமிடங்களே எடுத்துக்கொள்கின்றனர்.
இந்த உணவகம் எந்த வகையான விளமபரத்திலும் ஈடுபட்டதில்லை. வடிக்கையாளர்கள் மற்றவர்களிடம் இது குறித்து பகிர்வதே விளம்பரமாக அமைந்துள்ளது. டேஸ்ட்அட்லஸ் வெளியிட்ட 'உலகின் 100 மிகவும் பிரபலமான உணவகங்கள்' பட்டியலில் இந்த உணவகமும் இடம் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |