பிரித்தானிய நடிகரை காதலித்து கரம்பிடித்த தமிழ்ப்பட நடிகை! குவியும் வாழ்த்துக்கள்
தமிழ்ப்பட நடிகை எமி ஜாக்சன் பிரித்தானியாவின் பிரபல நடிகர் எட்வர்டு ஜாக் பீட்டர் வெஸ்ட்விக்கை காதலித்து கரம் பிடித்தார்.
எமி ஜாக்சன்
தமிழில் 2010ஆம் ஆண்டில் வெளியான 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திற்கு இடைப்பட்ட தீவான Isle of Manயில் பிறந்த எமி ஜாக்சன், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கில மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
2015ஆம் ஆண்டு முதல் George Panayiotou என்பவருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன், அவர் மூலம் குழந்தைக்கு தாயானார். ஆனால் இந்த ஜோடி 2021ஆம் ஆண்டில் பிரிந்தது.
காதலித்து திருமணம்
அதன் பின்னர் எமி ஜாக்சன், பிரித்தானியாவின் பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்கை (எட்வர்டு ஜாக் பீட்டர் வெஸ்ட்விக்) காதலித்து வந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
எட் வெஸ்ட்விக் 2006ஆம் ஆண்டில் வெளியான Children of Men படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். லண்டனில் பிறந்த இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து 4 விருதுகளை வென்றுள்ளார்.
திருமணம் தொடர்பான புகைப்படங்களை எமி ஜாக்சன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். தற்போது இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலர் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |