நகச்சொத்தையை போக்க அசத்தலான ஒரு முறை
நம்மில் பலருக்கு நகச்சொத்தை என்றால் என்னவென்று தெரியாது.காரணம்,கால்களில் கைகளில் இது ஏற்படும்போது இது பற்றிய அறியாமையால் பலர் கவனிக்காமல் விட்டுவிடுவர்.
பொதுவாக நோயாக இருந்தாலும் சரி,கிருமி தொற்றுக்களாக இருந்தாலும் சரி ஆரம்பத்திலேயே குணமாக்கி விடுவதுதான் சிறந்தது. நகச்சொத்தையானது கை நகங்களில் அல்லது கால் நகங்களில் பூஞ்சை கிருமிகளால் அல்லது பக்டீரியாக்களால் ஏற்படுகின்றது.
நமது கால் கைகளுக்குள் செல்லும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைக்கிருமிகள்.உட்செல்வதைத்தடுப்பது தோல் தான்,இந்த தோல் சிதைவடைதலின் பொது இவ்வாறான தொற்று கிருமிகள் உட்சென்று நோய்தாக்குதலை தொடங்குகிறது.முதலில் இது தோல் பகுதியில் தாக்கமடைய ஆரம்பித்து பின் வீக்கமாக வெளிப்பட்டு வலி கொடுக்கும்.
முதலில் வீக்கமாக வெளிப்படும்போதே உரிய மருத்துவ நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் நகச்சுத்து போன்று பெரிதான தாக்கங்கள் ஏற்பட்டு நகத்தையே நீக்கும் அளவிற்கு வீங்கிவிடும்.இவை பூஞ்சை அல்லது பக்டீரியா தாக்கத்திற்கான அறிகுறிகள் ஆகும்.பூஞ்சை தாக்கம் ஏற்படுமிடத்து வலியே இருக்காது.ஆனால் பக்டீரியா தாக்கும்போது வலி ஏற்படும்.
நகச்சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள்
- காற்றோட்ட வசதியில்லாது இருத்தல்.
- இறுக்கமான நகங்கள் மற்றும் விரல்களில் வலி ஏற்பட செய்வதான காலணிகளை அணிதல்.
- ஈரப்பதம் அதிகமுள்ள இடத்தில் நீண்ட நேரம் இருத்தல்.
சரி செய்வதற்கான வழிமுறைகள்
- வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறிட்டு அந்த இடத்தை 4 அல்லது 5 தடவை கழுவினால் சீல் ஏதேனும் ஏற்ப்பட்டு இருக்குமாயிருந்தால்,அது வெளியாகி உடனடியாக சரியாகிவிடும்.
- அல்லது மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் க்ரீம்களை பயன்படுத்தலாம்.
- ஈரப்பதம் இருக்கும் இடங்களில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்தல்.
- நீண்ட நேரம் காலுறை போட்டு இருக்கவேண்டிய அவசியம் இருந்தால் அதைக்கழுவி சுத்தமாக பயன்படுத்தல்.