உங்கள் இறப்பை நீங்களே அறியலாம்... மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் விலங்கு
பொதுவாகவே ஒருவருக்கு பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பும் இருக்கும். இவ்விரண்டுமே எதிர்பாராத விடயமாக தான் இருக்கும்.
மனிதனின் இறப்பை ஒரு சில விலங்குகளுக்கு கணித்து முன்னறிவிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
இதனடிப்படையில் 5 விலங்குகளுக்கு மனிதனின் மரணத்தை முன்னறிவிக்கும் சக்தி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நாய்கள்
நாய்களால் ஒரு மனிதனின் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியும். எனவே தான் அதிகமான வீட்டில் செல்லபிராணியாக நாய்கள் வளர்க்கப்படுகிறது. வீட்டில் உள்ள நாய் அழுதால் வீட்டிற்கு நல்லதல்ல என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
பூனைகள்
முந்தைய காலத்தில் இருந்தே பூனைகள் மரணத்தை கண்டறிவதாக அறியப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் 2 பூனைகள் சண்டை போடுவது நல்லதல்ல எனவும் அப்படி போட்டால், குறித்த வீட்டில் மரணம் நிகழும் எனவும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
கருப்பு பட்டாம்பூச்சி
வண்ண வண்ண நிறத்தில் இருக்கும் பட்டாம்பூச்சிகள் அனைத்தும் மங்களகரமானவை. ஆனால் கருப்பு நிற பட்டாம்பூச்சி மரணத்தின் தூதர். இது இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தால் அபசகுணமாக கருதப்படுகிறது.
வௌவால்
மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்கள் மரணத்தை கொண்டு வரும். தென் அமெரிக்க பகுதிகளில் வௌவால்களை மரணத்தின் தூதர்களாக கருதப்படுகிறது.
நரி
நரி வீட்டிற்குள் நுழைந்தால், அந்த வீட்டில் யாராவது இறப்பார்கள் என கருதப்படுகிறது. திடிரென்று வீட்டுக்குள் வந்தால் மரணம் வரப் போகிறது என்று கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |