கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க தினமும் ஒரு ஆப்பிள்: எப்படி சாப்பிட வேண்டும்?
ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.
தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் கிடைக்கின்றன.
ஆப்பிள் பழங்களை தோல் உரிக்காமல் சாப்பிடுவதுதான் சிறந்தது. ஆப்பிள் பழத்தின் தோலில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறம்பியுள்ளது.
fruitsmith
கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க தினம் ஒரு ஆப்பிள்
உப்பு நிறைந்த துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக நம்முடைய கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ரத்த நாளங்களில் கொழுப்புகள் சேர்ந்து, உடலுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு தடைபடும்.
இதன் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
தினசரி மருந்து மாத்திரைகள், சீரான உடற்பயிற்சி ஆகியவற்றோடு உங்கள் டயட்டில் ஆப்பிள் பழத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆப்பிளில் நார்ச்சத்தும் பாலிபீனாலும் அதிகளவு இருப்பதால் ஆப்பிள் பழங்களை தினமும் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.
daily times
மேலும் மெட்டபாலிசத்தை பலப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தினமும் இரண்டு முதல் நான்கு ஆப்பிள் பழம் சாப்பிட்டால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு ஐந்து முதல் எட்டு சதவிகிதம் வரை குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |