திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம்... சுவிஸ் தம்பதி தொடர்பில் வெளியான பகீர் பின்னணி
சுவிட்சர்லாந்தின் Dübendorf நகரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்த நிலையில் ஆண் ஒருவரை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் தொடர்பில் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.
Dübendorf நகர பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு சென்ற பொலிசாரால், 59 வயது ஆண் ஒருவரின் சடலமும், 58 வயது பெண் ஒருவர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டனர்.
சூரிச் மாநில பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், மீட்கப்பட்ட இருவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இரவு சுமார் 8.30 மணியளவிலேயே பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த குடியிருப்பில் என்ன நடந்தது என்பது குறித்து, விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது.
குறித்த தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை எனவும், இருவரும் அக்கம்பக்கத்தினருடன் மிக பாசமாகவும் அக்கறையுடனும் நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடனே காணப்பட்டு வந்ததாகவும், இப்படியான ஒரு சூழல் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
மேலும் சனிக்கிழமை இரவு துப்பாக்கி சத்தம் கேட்டது எனவும், ஆனால் அதன் பின்னர் மிகுந்த அமைதி காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே, பொலிசாருக்கு குறித்த தகவலை தெரியப்படுத்தியுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பவத்திற்கு முன்னர், சமூக ஊடக பக்கத்தில் தமக்கு விருப்பமான பாடல் ஒன்றை அந்த ஆண் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.