ஜேர்மனியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கேட்ட வெடிச்சத்தம்... 3 பேர் பலி, பலர் காயம்: சதிவேலையா?
ஜேர்மன் நகரமொன்றில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கேட்ட வெடிச்சத்தம்...
Image: Thilo Schmuelgen/REUTERS
ஜேர்மனியின் Düsseldorf நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், நேற்று, அதாவது, வியாழக்கிழமை அதிகாலை பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் தரைத்தளத்திலுள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து பற்றிய தீ, வேகமாக அந்த ஆறு தளங்கள் கொண்ட அடுக்கு மாடிக் கட்டிடத்தில் பரவ, கண்ணாடி ஜன்னல்கள் வெடித்துச் சிதறியுள்ளன.
பலத்த சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து அதிர்ச்சியில் விழித்த சிலர், ஜன்னல் வழியாக கண்ணாடித்துண்டுகள் சிதறிக்கிடப்பதை அறியாமல் வெளியே குதித்துள்ளார்கள்.
Image: Martin Meissner/AP Photo/picture alliance
சதிவேலையா?
இந்த சம்பவத்தில் சதிவேலை எதுவும் இருப்பது போல் முதல் கட்ட விசாரணையில் தெரியவரவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, பொலிசாரும் அவசர உதவிக்குழுவினரும் வீடுகளுக்குள் சிக்கியிருப்போரை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில், தீயிலிருந்து தப்ப முயன்ற இரண்டு பேர் படிக்கட்டுகளிலும், ஒருவர் தன் வீட்டிலும் உயிரிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Image: Thilo Schmuelgen/REUTERS
மேலும், இந்த பயங்கர தீவிபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |