நேர்மையாளர் சர்வாதிகாரியாக தான் இருக்கணும்.., சீமான் ஆவேசமான பேச்சு
ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாக தான் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சீமான் பேசியது
திருநெல்வேலி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ஒரு நேர்மையாளர் என்பவர் சர்வாதிகாரியாக தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நேர்மையாக இருக்க முடியும்.
சர்வாதிகாரியாக இல்லையென்றால் எதையும் சரிசெய்ய முடியாது. காமராஜர், நேரு போன்ற மிகச்சிறந்த ஆட்சியாளர்கள் அன்பான சர்வாதிகாரியாக இருந்துள்ளார்கள்.
ஒரு கட்சி என்றால் விதிமுறைக்கு கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்படவில்லை என்றால் எவ்வளவு பெரிய கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இடமில்லை. நான் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறேன் என்றல் போய்விடு.
மது தொடர்பான வழக்கில் அரசின் கொள்கையில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறுகிறது. அதே நீதிமன்றம் தான் நீட் விவகாரத்தில் அரசின் கொள்கைகளை ஏற்காமல் தேர்வு எழுத சொல்கிறது" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |