பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்தியப் பெண் ஒருவருக்கு அளிக்கப்பட்ட கௌரவம்
கல்வித்துறையில் சிறப்புற பணியாற்றிவரும் இந்தியப் பெண்மணி ஒருவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
யார் அந்தப் பெண்மணி?
டாக்டர் ரேவதி சீனிவாசன் (Dr Revathi Srinivasan) என்னும் அந்தப் பெண்மணி, இந்தியாவின் மும்பையிலுள்ள Sulochanadevi Singhania School என்னும் பள்ளியில் வழிகாட்டியாகவும், Singhania குழுமப் பள்ளிகளின் இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார்.
டாக்டர் ரேவதி சீனிவாசன், கல்வியில் தனது பங்களிப்புக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான Ms. Susan Kramer மற்றும் Southwark மேயரான கவுன்சிலர் சுனில் சோப்ரா ஆகியோர் டாக்டர் ரேவதி சீனிவாசனுக்கு ‘Global Icon and Inspirational Global Leader in Education’ என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கி கௌரவித்தார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |