நியூயார்க் மக்களுக்கு ஹீரோவாக மாறிய புலம்பெயர் ஆசிய நாட்டவர்
அமெரிக்காவின் நியூயார்க் நகரை நடுங்கவைத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கொல்லப்பட்ட நால்வரில் பொலிஸ் அதிகாரியும் ஒருவர்.
அவர் ஒரு ஹீரோ
நியூயார்க் நகர காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளார் 36 வயதான திதாருல் இஸ்லாம். இவரே 27 வயதான துப்பாக்கிதாரியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேயர் எரிக் ஆடம்ஸ் கூறுகையில், பங்களாதேஷிலிருந்து குடியேறியவர் இஸ்லாம், அவர் நியூயார்க்கை நேசித்தார், கடவுளை நம்பினார், ஒரு தெய்வீக நபரின் வாழ்க்கையை வாழ்வதில் நம்பிக்கை கொண்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, அந்த அதிகாரியின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர் ஒரு ஹீரோ என்றும், அவரது உயிரைப் பணயம் வைத்ததற்காக நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம் என்றும் சொன்னதாக எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
காவல் துறையின் மிகச் சிறந்த பகுதியை இஸ்லாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக NYPD கூறியது. மேலும், அவர் நியூயார்க் நகர மக்களை ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டிருந்தார், இன்று அவரது உயிர் துயரகரமான முடிவுக்கு வந்தது.
புரிந்துகொள்ள முடியாத வேதனையின் இந்த நேரத்தில் நாமும் பிரார்த்தனையில் இணைகிறோம். அவரது மரபை என்றென்றும் போற்றுவோம் என்றும் NYPD தெரிவித்துள்ளது.
எட்டு மாத கர்ப்பிணி
இஸ்லாம் NYPD-யில் மூன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார், அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்றும் நியூயார்க் நகர காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் தெரிவித்தார்.
உள்ளூர் தகவல்கள் அடிப்படையில், இஸ்லாமின் மனைவி மூன்றாவது குழந்தையுடன் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. நியூயார்க் நகரை உலுக்கிய இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மேலும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களின் தகவல்கள் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும், அவர்கள் உறுதி செய்ததன் பின்னரே, அடையாளம் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட ஷேன் டெவோன் தமுரா காயங்கள் காரணமாக மரணமடைந்ததாக கமிஷனர் டிஷ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |