பிரான்ஸ் வேலைநிறுத்தம்: விமான சேவைகள் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு
ஓய்வு பெறும் வயதை பிரான்ஸ் அரசு அதிகரிப்பதை எதிர்த்து பிரான்ஸ் முழுவதும் பல்வேறு துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகள் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைநிறுத்தத்தில் முதன்முறையாக இணையும் விமானநிலையங்கள்
நாளை, பிப்ரவரி 16ஆம் திகதி நடைபெற இருக்கும் வேலைநிறுத்தத்தில், முதன்முறையாக உள்ளூர் விமான நிலையங்களும் இணைந்துகொள்ள இருக்கின்றன.
ஏற்கனவே, ரயில் சேவை வேலைநிறுத்ததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை விமான நிலையங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதால், Toulouse, Marseille, Lyon, Montpellier மற்றும் Nantes விமான நிலையங்களிலிருந்து புறப்படும் சுமார் 20 சதவிகித விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரீஸைப்பொருத்தவரை, Orly விமான நிலையத்திலிருந்து புறப்படும் 30 சதவிகித விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. Charles de Gaulle விமான நிலையத்தைக் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், மேலும் பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.