2023ஆம் ஆண்டில் பிரான்சில் நிகழவிருக்கும் இரண்டு மிக முக்கிய மாற்றங்கள்
பிரான்ஸ் நாட்டில் 2023ஆம் ஆண்டில் இரண்டு மிக முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.
குறிப்பாக பிரான்சில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் மீது இந்த மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கின்றன.
2023ஆம் ஆண்டு அமுலுக்கு வரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உள்நுழைவு மற்றும் வெளியேற்ற அமைப்பு (EU's new Entry and Exit System - EES) குறித்து ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
நீங்கள் second-home owner in France என்னும் பிரான்சில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டவராக இருப்பீர்களானால், உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி...
2023ஆம் ஆண்டு, ஐரோப்பியம் ஒன்றியம் எப்படி தனது எல்லைகளைக் கட்டுப்படுத்துகிறது என்பது தொடர்பில் EES மற்றும் ETIAS இரண்டு பெரிய மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இவை இரண்டுமே பிரான்சில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டவர்களை பாதிக்கக்கூடும்.
Entry and Exit System - EES திட்டம்
இந்த தகவல் யாருக்கானது?
இந்த தகவல், பிரான்சில் வீடு வைத்திருக்கும், ஆனால், பிரான்சில் வாழாத வெளிநாட்டவர்களுக்கானது.
இந்த EES திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்களை மட்டுமே பாதிக்கும்.
எங்கு பாதிப்பை ஏற்படுத்தும்?
EES திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, நீங்கள் பிரான்சுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையில் பயணம் செய்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
என்ன பாதிப்பு?
EES திட்டம், பிரான்சுக்குள் நுழைவது, அல்லது எவ்வளவு நாட்கள் தங்குவது என்பது போன்ற விடயங்களைக் கட்டுப்படுத்துவது அல்ல. ஆகவே, பிரான்ஸ் நாட்டில் குடியிருப்பு அனுமதி பெறாதவர்களுக்கு 90 நாட்கள் காலவரையறை கட்டுப்பாடு நீடிக்கிறது.
இந்த EES திட்டத்தின் நோக்கம், பிரான்ஸ் நாட்டில் குடியிருப்பு அனுமதி பெறாதவர்களுக்கு 90 நாட்கள் காலவரையறை முதலான எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாகும்.
அதன்படி, பிரான்சுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட்கள் கணினி மூலமாக தானாகவே அவர்களுடைய அனைத்து விவரங்களும் எல்லையில் ஸ்கேன் செய்யப்பட உள்ளன.
இதனால் பிரான்சில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு என்ன பாதிப்பு?
உங்களுக்கு பிரான்சில் சொத்து இருக்குமானால், நீங்கள் Schengen பகுதியில் ஒவ்வொரு 180 நாட்களுக்கும், 90 நாட்கள் மட்டுமே தங்க முடியும் என்பதை நிச்சயம் அறிந்திருக்கக்கூடும்.
பிரான்சில் வீடு வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த விதிக்கு இணங்கி நடந்துகொள்கிறார்கள். பிரான்சிலிருக்கும் தங்கள் வீட்டில் நீண்ட நாட்கள் தங்க விரும்புபவர்களோ, visitor விசா பெற்றுக்கொள்கிறார்கள்.
அப்படி நீங்கள் விசா பெறவில்லையானால், புலம்பெயர்தல் விதிகளின்படி நீங்கள் ஒரு சுற்றுலாப்பயணி. அப்படியானால், இந்த EES திட்டம் உங்களுக்குப் பொருந்தும்.
அதாவது, எல்லையிலும், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் ஒவ்வொரு முறை நீங்கள் நுழையும்போதும் நீங்கள் சோதனைக்குட்படுத்தப்படுவீர்கள்.
உங்கள் பாஸ்போர்ட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு உங்கள் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவை பதிவு செய்யப்பட்டு Schengen பகுதியில் ஒவ்வொரு 180 நாட்களுக்கும், 90 நாட்களுக்கு அதிகமாக தங்கியிருக்கிறீர்களா என கணக்கிடப்படும். அப்படி நீங்கள் தங்கியிருப்பது தெரியவந்தால் உங்களுக்கு அபராதமும், மீண்டும் Schengen பகுதியில் நுழையத் தடையும் விதிக்கப்படும்.
உங்களிடம் விசா இருக்குமானால், 90 நாட்கள் விதியும் உங்களுக்குப் பொருந்தாது, EES திட்டமும் உங்களுக்குப் பொருந்தாது.
இந்த EES திட்டம் எப்போது அமுலுக்கு வருகிறது?
EES திட்டம் 2023ஆம் ஆண்டு மே மாதம் அமுலுக்கு வர உள்ளது.
ETIAS திட்டம் எப்போது அமுலுக்கு வருகிறது?
ETIAS திட்டத்தை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அமுல் படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
இந்த ETIAS திட்டம் சுற்றுலாப்பயணிகளுக்கானது. பிரான்சில் 90 நாட்களுக்கு அதிகம் தங்க விரும்பியும் விசா பெறாதவர்கள் புலம்பெயர்தல் விதிகளின்படி சுற்றுலாப்பயணி என்பதால் இந்த திட்டம் அவர்களுக்கு பொருந்தும்.
ஆனால், பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற்று வாழ்வோர் அல்லது விசா வைத்திருப்போரை இந்த திட்டம் பாதிக்காது.
மேலதிக தகவல்களுக்கு...https://www.thelocal.fr/20221102/what-second-home-owners-in-france-need-to-know-about-2023-passport-control-changes/