பிரெஞ்சுக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கு ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய செய்தி
2023ஆம் ஆண்டு மே மாதம் அமுலுக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உள்நுழைவு மற்றும் வெளியேற்ற அமைப்பு (EU's new Entry and Exit System - EES) அல்லது புதிய EES பாஸ்போர்ட் விதிகள் குறித்த ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது.
இந்த திட்டம் குறித்து சில கேள்விகள் எழுந்த நிலையில், அது தொடர்பாக முக்கிய செய்தி ஒன்றை ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் பிரான்சில் வாழும், பிரெஞ்சுக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கு அல்ல!
EES பாஸ்போர்ட் விதிகளின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளில், 90 நாட்கள் விதி கடுமையாக்கப்படுவதுடன், எல்லைப் பாதுகாப்பும் பலப்படுப்பத்தப்பட உள்ளது. அதற்காக, தானியங்கி பாஸ்போர்ட் ஸ்கேன் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இந்த திட்டம், பிரான்சுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் குறுகிய காலம் மட்டுமே பிரான்சில் செலவிடும் நோக்கத்துடன் பிரான்சுக்கு பயணிப்பவர்களுக்கானது. அது, பிரான்சில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கானதோ, விசாவுடன் வரும் பிரான்ஸ் நாட்டில் இரண்டாவது வீடு வைத்துள்ளவர்களுக்கானதோ அல்ல.
இந்த EES பாஸ்போர்ட் விதிகள், பிரான்சில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கானது அல்ல என்பதை தற்போது ஐரோப்பிய ஆணையம் உறுதி செய்துள்ளது.
ஆகவே, எல்லை கடந்து பிரான்சுக்குள் நுழையும்போது, ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் எல்லை அதிகாரிகளிடம் தங்கள் பயண ஆவணங்களையும், குடியிருப்பு அனுமதிகளையும் கையளிக்கவேண்டும்.
Photo by Kenzo TRIBOUILLARD / AFP
இந்த அறிவிப்புக்கு மற்றொரு அர்த்தமும் உள்ளது
இதையே இன்னொரு விதமாகக் கூறினால், பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்கள், EES பாஸ்போர்ட் விதிகளுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தானியங்கி பாஸ்போர்ட் நுழைவாயில்களுக்குள் நுழையமுடியாது அல்லது நுழையக்கூடாது.
காரணம் என்னவென்றால், EES பாஸ்போர்ட் விதிகளுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தானியங்கி பாஸ்போர்ட் நுழைவாயில்களில், பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டைக் காட்டும் வசதி மட்டுமே உள்ளது. அங்கு, யாரும் தங்கள் குடியிருப்பு அனுமதியையோ, விசாவையோ காட்டமுடியாது. அதாவது, பிரான்சில் வாழும் குடியிருப்பு அனுமதி பெற்ற ஒருவர், EES பாஸ்போர்ட் விதிகளுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தானியங்கி பாஸ்போர்ட் நுழைவாயில்களுக்குள் நுழைய முயன்றால், அது தேவையில்லாத குழப்பங்களையும், தாமதங்களையும் ஏற்படுத்தக் கூடும்.
இன்னும் சற்றே காரமாகக் கூறினால், பிரெஞ்சு விசா அல்லது குடியிருப்பு அனுமதி அட்டை வைத்திருப்போர், EES பாஸ்போர்ட் விதிகளுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தானியங்கி பாஸ்போர்ட் நுழைவாயில்களுக்குள் நுழையக்கூடாது!
அவர்கள், அதிகாரிகள் நின்று பாஸ்போர்ட்களை சோதிக்கக்கூடிய நுழைவாயில்கள் வழியாகத்தான் நுழைய வேண்டும். அங்கு அவர்கள் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு அனுமதி அட்டை ஆகியவற்றை அதிகாரிகளிடம் கையளிக்கவேண்டும் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு... https://www.thelocal.fr/20221107/foreigners-living-in-france-not-covered-by-new-ees-passport-rules-commission-confirms/