உயர் கல்வி பயில விரும்புவோருக்கு இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து ஒரு முக்கிய செய்தி...
2023/2024ஆம் ஆண்டுக்கான பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கல் துவங்கியுள்ளது.
இந்த திட்டம் மூலமாக, பிரித்தானியாவிலுள்ள தலைசிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில், முழு நிதி உதவியுடன் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம்.
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், 2023/2024ஆம் ஆண்டுக்கான பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கல் துவங்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய பிரித்தானிய உயர் ஸ்தானிகரான Sarah Hulton, தகுதியுடைய இலங்கையர்கள் இந்த திட்டம் மூலமாக பிரித்தானியாவிலுள்ள தலைசிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் முழு நிதி உதவியுடன் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள விருப்பமுடையோர், https://www.chevening.org/scholarships/ என்னும் இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.