ஜேர்மன் குடியுரிமை: இரட்டைக் குடியுரிமை தொடர்பில் ஒரு முக்கிய செய்தி...
ஜேர்மனி சீக்கிரத்தில் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்க உள்ளது.
ஆனால், அது தொடர்பாக சில கேள்விகள் எழுந்துள்ளன.
இரட்டைக் குடியுரிமை தொடர்பான சட்டம்
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர் ஒருவர் இரட்டைக் குடியுரிமை பெறுவது, அதாவது தங்கள் நாட்டின் குடியுரிமையைத் தக்கவைத்துக்கொண்டே ஜேர்மன் குடியுரிமை பெறுவதைக் குறித்ததுதான் இப்போதைய பிரச்சினை.
அப்படியிருக்கும்போது, ஒருவர் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது, அல்லது அவருக்கு ஜேர்மன் குடியுரிமை கிடைக்கும்போது ஜேர்மனியில் என்ன சட்டம் அமுலில் உள்ளதோ அதைப் பொருத்துத்தான் அவருக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
ஆக, இப்போதைக்கு ஜேர்மன் குடியுரிமை பெற விரும்புவோர் தங்கள் முந்தைய குடியுரிமையை இழந்துதான் ஆகவேண்டும்.
பிரித்தானிய மற்றும் ஜேர்மன் இரட்டைக் குடியுரிமை
நீங்கள் ஜேர்மன் பாஸ்போர்ட்டுக்கு விண்னப்பித்துவிட்டு காத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, ஜேர்மனியில் இரட்டைக் குடியுரிமை சட்டம் அமுலுக்கு வந்தால், உங்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்கும்.
Photo: picture alliance/dpa | Britta Pedersen
ஜேர்மன் குடியுரிமைச் சட்டம் மாறுவதற்கு முன் உங்கள் ஜேர்மன் பாஸ்போர்ட் தயாராகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் முந்தைய குடியுரிமையை கைவிட்டுதான் ஆகவேண்டும் (நீங்கள் ஒரு ஐரோப்பிய ஒன்றியக் குடிமகன், உங்களால் ஒரு அகதி அல்லது, உங்கள் குடியுரிமையை இழப்பதால் உங்களுக்கு பெரும் செலவு போன்ற சில காரணங்களால் உங்களால் உங்கள் குடியுரிமையை இழக்கமுடியாது என்பது போன்ற சில விதி விலக்குகளும் உள்ளன).
ஒரு நல்ல விடயம்
அப்படி ஜேர்மன் குடியுரிமை பெறுவதற்காக நீங்கள் உங்கள் சொந்தக் குடியுரிமையை இழக்கும் பட்சத்தில், நீங்கள் அதை நிரந்தரமாக இழக்கத் தேவையில்லை. சட்டம் மாறியபின் நீங்கள் உங்கள் சொந்த நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் (ஆனாலும், அது, உங்கள் நாடு நீங்கள் இழந்த குடியுரிமையை மீண்டும் அளிக்குமா என்பதையும் பொருத்தது என்பதை நினைவில் கொள்ளவும்).