பிரான்ஸ் நாட்டுக்குப் பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டுக்கு பயணிப்போர், பிரான்சில் வாகனங்களை இயக்கவேண்டுமானால், மாசுக் கட்டுப்பாட்டு ஸ்டிக்கர்களை தங்கள் வாகனத்தில் ஒட்டுவது, இந்த மாதம் முதல், அதாவது, ஜனவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல்...
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், பிரான்சில் கார்களில் பயணிப்போர், தங்கள் கார்களில் மாசுக் கட்டுப்பாட்டு ஸ்டிக்கர்களை ஒட்டி வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடு, எந்த நாட்டைச் சேர்ந்த காரானாலும் சரி, எந்த வகை காரானாலும் சரி, அனைத்து கார்களுக்கும் பொருந்தும்.
மேலும், நீங்கள் 2024 autoroute vignette வகை ஸ்டிக்கர் பயன்படுத்துபவராக இருந்தால், அந்த ஸ்டிக்கர் பயன்படுத்த இன்றுதான் கடைசி நாள் என்பதை தெரிந்துகொள்வது நல்லது.
நாளை, நீங்கள் காரில் பயணிக்கும்போது, ஒன்றில் புதிய e-vignette ஒன்றை ஒன்லைனில் வாங்கிருக்கவேண்டும் அல்லது சாதாரண மாசுக் கட்டுப்பாட்டு ஸ்டிக்கரை காரில் ஒட்டியிருக்கவேண்டும்.
இந்த விதியை மீறுபவர்களுக்கு 450 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |