இங்கிலாந்தில் மூன்று மாடி வீட்டின் கூரையில் கிடந்த சடலம்: மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம்...
இங்கிலாந்தில், மூன்று மாடி வீடு ஒன்றின் கூரையில் சடலம் ஒன்று போர்வையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த விடயம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தீயணைப்புத்துறையினர் ஏணிகள் உதவியுடன் அந்த வீட்டின் மாடியில் ஏறி, போர்வையில் சுற்றிவைக்கப்பட்டிருந்த அந்த உடலை கீழே இறக்கியுள்ளனர்.
மேற்கு யார்க்ஷையரிலுள்ள லீட்ஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு மூன்று மாடி வீட்டின் கூரையில் சந்தேகத்துக்குரிய ஒரு பொருள் கிடப்பதாக நேற்று பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Credit: Ben Lack
உடனடியாக பொலிசார், அவசர உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் அங்கு விரைந்தனர். தீயணைப்புத்துறையினர் ஏணிகள் உதவியுடன் அந்த வீட்டின் மாடியில் ஏறியபோது உயிரற்ற உடல் ஒன்று போர்வையில் சுற்றிவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, அந்த உடலை கீழே இறக்கினர்.
அந்த வீட்டின் மூன்றாவது மாடியில் எப்படி ஒரு உயிரற்ற உடல் வந்தது என மக்கள் குழப்பமடைந்திருந்த நிலையில், உயிரிழந்த அந்த நபர் அதே வீட்டில் வாழ்ந்துவந்த Gerard Colgan (32) என்பவர் என்பது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்தான் அவர் காணாமல் போனதாக பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டிருந்தது.

Credit: Ben Lack

Credit: Ben Lack

Credit: Ben Lack