ரூ 55,683 கோடி மதிப்பிலான விவாதத்துக்குரிய நிறுவனத்தின் CEO... அவரது தொழில்
இந்தியாவை சேர்ந்த 39 வயது பெண்மணி ஒருவர், உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு நிறுவனத்தின் தமைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
OnlyFans நிறுவனத்தின்
மும்பையை சேர்ந்த Amrapali 'Ami' Gan என்பவரே விவாதத்துக்குரிய OnlyFans நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
தனிப்பட்ட ஆபாச காட்சிகளுக்காக மட்டும் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 2020ல் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு அதிகாரியாக பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தின் நிறுவனர் Tim Stokely பதவி விலகியதை அடுத்து தலைமை நிர்வாக பொறுப்புக்கு Amrapali Gan வந்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றால் உலகம் மொத்தமாக ஸ்தம்பித்திருக்க, பல கலைஞர்கள் OnlyFans நிறுவனம் பக்கம் திரும்பினர். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதை அடுத்து ஆர்கேட் ஏஜென்சியின் ஆலோசகர் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.
ஒப்பிடுகையில் 19 சதவிகிதம்
இதன் பின்னர் 2020ல் OnlyFans நிறுவனத்தில் இணைந்துள்ளார். OnlyFans நிறுவனத்தின் தாய் நிறுவனமான Fenix International வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், OnlyFans நிறுவனத்தில் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மேலும் 2022ல் 5.55 பில்லியன் டொலர் கட்டணமாக வாடிக்கையாளர்கள் செலுத்தியுள்ள நிலையில், 2023ல் 6.63 பில்லியன் டொலர் என அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது. மேலும், OnlyFans நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 55,683 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |