நாடுகடத்தப்படுகிறார் பிரித்தானியாவுக்குத் தப்பியோடிய இந்திய வைர வியாபாரி?: மேல்முறையீடு தள்ளுபடி...
இந்திய வங்கி ஒன்றில் பண மோசடி செய்துவிட்டு பிரித்தானியாவுக்குத் தப்பியோடிய வைர வியாபாரியான நீரவ் மோடி (51), நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதைக் காரணமாகக் காட்டி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் எதிர்கொள்வதிலிருந்து தப்ப நினைப்பது நியாயமாகாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2பில்லியன் டொலர்கள் கடன் மோசடி செய்துவிட்டு பிரித்தானியாவுக்குத் தப்பியோடி, தற்போது லண்டனில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடி, நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனுவை பிரித்தானிய உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த உத்தரவிட்டது நியாயமானதே என லண்டன் உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
BIG BREAKING: Big win for Indian agencies. Nirav Modi to be extradited back to India! Nirav Modi loses his appeal before UK High Court. High Court says extraditing Modi back to India will not be unjust or oppressive. pic.twitter.com/FkqgD1FYQb
— Law Today (@LawTodayLive) November 9, 2022
கடந்த பிப்ரவரி மாதம், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கு ஆதரவாக தீர்ப்பளித்திருந்தது. அதே நேரத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், Lord Justice Jeremy Stuart-Smith மற்றும் Justice Robert Jay ஆகிய நீதிபதிகள் நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்கள்.
நீரவ் மோடி தனது மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதைக் காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்க நினைப்பது நியாயமாகாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image Source : PTI