பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருவதற்காக நிலத்தை விற்ற இந்தியர்: காத்திருந்த ஏமாற்றம்

United Kingdom India
By Balamanuvelan Jun 03, 2024 05:08 AM GMT
Report

முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்த பலர், தாங்கள் வேலைக்காக விண்ணப்பித்த ஒரு நிறுவனமே பிரித்தானியாவில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். அப்படி ஒரு மோசடி பிரித்தானியாவில் நடந்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருவதற்காக நிலத்தை விற்ற இந்தியர்: காத்திருந்த ஏமாற்றம் | An Indian Sold Land To Come Uk To Work

Guardian Design/Getty Images/Alamy

நிலத்தை விற்ற இந்தியர்

குடும்பத்தின் கடனை அடைப்பதற்காக பிரித்தானியாவுக்கு செல்ல முடிவு செய்தார் தென்னிந்தியாவில் வாழும் அகில் ஜென்னி (Akhil Jenny). ஆனால், பிரித்தானியாவுக்குச் செல்வதற்கு பணம் வேண்டுமே? ஆகவே, தங்கையின் திருமணத்துக்காக வைத்திருந்த நிலத்தை விற்று, 16,000 பவுண்டுகளை ஏஜண்ட் ஒருவருக்கு கொடுத்து sponsorship certificateம் விசாவும் பெற்றார் அகில்.

பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருவதற்காக நிலத்தை விற்ற இந்தியர்: காத்திருந்த ஏமாற்றம் | An Indian Sold Land To Come Uk To Work

Photograph: Christopher Thomond/The Guardian

அவருக்கு, வாரத்துக்கு 37.5 மணி நேர வேலையும், ஆண்டொன்றிற்கு 21,580 பவுண்டுகள் சம்பளமும் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் காத்திருந்த ஏமாற்றம்

பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருவதற்காக நிலத்தை விற்ற இந்தியர்: காத்திருந்த ஏமாற்றம் | An Indian Sold Land To Come Uk To Work

Photograph: Christopher Thomond/The Guardian

குடும்பக் கஷ்டம் எல்லாம் கொஞ்ச காலத்தில் மாறிவிடும் என்ற நம்பிக்கையுடன் பிரித்தானியா வந்திறங்கிய அகிலுக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. ஆம், அவருக்கு ஸ்பான்சர் செய்ததாக கூறிய நிறுவனத்தை தொலைபேசியில் அழைத்தால், அங்கே அவருக்கு வேலை இல்லை என்ற பதில் வந்தது. அதிர்ச்சியடைந்த அகில், வேறு வழியில்லாமல் அந்த நிறுவன அலுவலரிடமே கென்சிக் கூத்தாடி சுத்தம் செய்யும் வேலை ஒன்றை பெற்றார். அதற்கான சம்பளம், ஒரு மணி நேரத்துக்கு 11 பவுண்டுகள்!

பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருவதற்காக நிலத்தை விற்ற இந்தியர்: காத்திருந்த ஏமாற்றம் | An Indian Sold Land To Come Uk To Work

Photograph: Christopher Thomond/The Guardian

அகில் இப்போது Sheffieldஇல் அவரைப்போலவே ஏமாந்த மற்றொரு புலம்பெயர்ந்தவரான Geo Ambooken என்பவருடைய குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.

செவிலியர் படிப்பு முடித்துவிட்டு, வயதானவர்களை கவனித்துக்கொள்ளும் வேலைக்காக வந்த இவர்கள், இப்போது சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டின் நிலத்தை விற்று பிரித்தானியாவுக்கு வந்தவர்களால், வீட்டுக்கு ஏதாவது பணம் அனுப்பமுடியுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டதால், வாங்கிய கடனை அவர்கள் எப்போது அடைக்கப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருவதற்காக நிலத்தை விற்ற இந்தியர்: காத்திருந்த ஏமாற்றம் | An Indian Sold Land To Come Uk To Work

Photograph: Christopher Thomond/The Guardian

இவர்களைப்போலவே நல்ல சம்பளம் கிடைக்குமென்று நம்பி பிரித்தானியாவுக்கு வந்து ஏமாந்த கேரளாவைச் சேர்ந்த நிஷாமோள் செபாஸ்டியன் என்னும் பெண், தான் ஏமாற்றப்பட்டது குறித்து தன் நாட்டு முதலமைச்சருக்கே கடிதம் எழுதிவிட்டார். அவர் இந்த பிரச்சினையில் தலையிட, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அதிகாரிகள் உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உங்களுக்கு சாப்பாட்டுக்கு கஷ்டமாக இருந்தால், உணவு வங்கியில் போய் உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் பொலிசார் என்கிறார் நிஷாமோள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US