உலகிலேயே வெறும் 6 பேர் மட்டுமே வசிக்கும் தீவு.., எங்கு உள்ளது தெரியுமா?
An island in the world where only 6 people live- உலகில் 800 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
சில நாடுகளில் மக்கள் தொகை அதிகமாகவும், சில நாடுகளில் குறைவாகவும் உள்ளது.
அந்தவகையில், உலகிலேயே வெறும் 6 பேர் மட்டுமே நிரந்தரமாக வசிக்கும் ஒரு தீவு உள்ளது.
ஐரோப்பாவில் உள்ள ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) மைக்கின்ஸ் (Mykines) என்ற தீவு அமைந்துள்ளது.

இந்தத் தீவு முழுவதும் பசுமையான மலைகள், அழகான கடற்கரைகள் மற்றும் அமைதியான சூழலைக் கொண்டுள்ளது.
இந்தத் தீவில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்தத் தீவில் மொத்தம் 6 பேர் மட்டுமே நிரந்தரமாக வசிக்கின்றனர். இந்தத் தீவின் இயற்கை அழகைக் காண பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக, இங்கு காணப்படும் பஃபின் (Puffin) பறவைகளைப் பார்ப்பதற்காக அதிகமானோர் வருகின்றனர்.

மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்தத் தீவிற்குச் செல்ல சிறந்த காலமாகும். இந்த மாதங்களில் பஃபின் பறவைகளை அதிக அளவில் பார்க்க முடியும்.
தீவைச் சுற்றிப் பார்க்க சுமார் 6 முதல் 7 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்கும் வகையில், ஒரு நாளைக்கு 100 முதல் 150 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும்.
பஃபின் பறவைகள் வரும் காலத்தில் மட்டுமே படகு சேவை இயக்கப்படுகிறது. எனவே, இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் இந்தத் தீவிற்குச் செல்ல முடியாது.
மைக்கின்ஸ் தீவிற்குச் செல்ல இரண்டு முன்பதிவுகள் செய்ய வேண்டும்.

படகுப் பயணத்திற்கு ssl.fo இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இருவழிப் பயணக் கட்டணம் 246 DKK (சுமார் ரூ.3,500).
நடைப்பயணத்திற்கு hiking.fo இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கான கட்டணம் 400 DKK (சுமார் ரூ.5,700).
முன்கூட்டியே நடைப்பயணக் கட்டணம் செலுத்தாமல் சென்றால் 500 DKK (சுமார் ரூ.7,100) செலுத்த வேண்டும். மேலும், வழிகாட்டியுடன் மட்டுமே தீவைச் சுற்றிப் பார்க்க முடியும்.
இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த இந்தத் தீவு, சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் இடமாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |