பிரித்தானிய நகரமொன்றில் பொலிஸ் நிலையத்துக்கு அருகே அடித்த நாற்றம்: பொலிசாருக்கு தெரியவந்த அதிரவைக்கும் உண்மை...
இங்கிலாந்திலுள்ள Lowestoft என்னும் நகரிலுள்ள ஒரு இடத்தில் ஒரு நாற்றம் வீசுவதை பலரும் கவனித்திருக்கிறார்கள்.
பொலிசார் அங்கு சென்றபோது அதிர்ச்சியளிக்கும் ஒரு விடயத்தைக் கண்டுபிடித்தார்கள்.
இங்கிலாந்திலுள்ள Lowestoft என்னும் நகரிலுள்ள ஒரு இடத்தில் ஒரு நாற்றம் வீசுவதை பலரும் கவனித்திருக்கிறார்கள்.
அந்த இடத்துக்கு சற்று தொலைவில்தான் பொலிஸ் நிலையம் ஒன்றும் உள்ளது. ஆக, மக்களைப்போலவே, பொலிசாரும் அந்த நாற்றத்தைக் கவனித்து அந்த இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.
அப்போது பெரிய கட்டிடம் ஒன்றிற்குள் ஒளிரும் ஒளி விளக்குகளுடன் கஞ்சா பண்ணை ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள் பொலிசார்.
Image: Suffolk Police / SWNS
அங்கு தூங்கி வழிந்தவண்ணம் உட்கார்ந்துகொண்டிருந்த காவலாளி ஒருவரை பொலிசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பொலிசார் சற்றே வேடிக்கையாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ’கஞ்சா வளர்ப்பது சட்டப்படி குற்றம், அது மோசமானதும் கூட, அதுவும், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலேயே கஞ்சா தொழிற்சாலை அமைப்பது மோசமான ஐடியா இல்லையா’ என்று கூறியுள்ளார்கள்.
Image: Google Maps