மூன்று ATM கார்டு இருக்கிறது.., QR Code அட்டையை காட்டி யாசகம் கேட்கும் முதியவர்
முதியவர் ஒருவர் QR Code அட்டையை காட்டி யாசகம் கேட்கும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிஜிட்டல் முறையில் யாசகம்
தமிழக மாவட்டமான திருப்பத்தூர், புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் டிஜிட்டல் முறையில் யாசகம் கேட்கும் சம்பவம் வைரலாகி வருகிறது.
அதாவது அவர் QR Code அட்டையை காட்டி யாசகம் கேட்கிறார். கையில் சில்லறை இல்லை என்று கூறுபவர்களிடம் QR Code அட்டையை காட்டி பணத்தை அதில் போட சொல்கிறார்.
அவரது வித்தியாசமான அணுகுமுறையால் பலரும் அவருக்கு பணம் கொடுக்க முன்வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம்தான் பரிவர்த்தனை நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், தன்னிடம் 3 வங்கி ஏ.டி.எம். கார்டுகள் இருப்பதாகவும், பர்சில் பணம் வைத்திருப்பது அரிதாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தான் QR Code அட்டையை காட்டி டிஜிட்டல் முறையில் யாசகம் கேட்பதாக அந்த முதியவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |