20 ஆண்டுகளாக இருந்த அரச மரத்தை வெட்டியதால் கதறி அழுத மூதாட்டி.., அடுத்து நடந்த இன்ப அதிர்ச்சி
20 ஆண்டுகளாக இருந்த அரச மரத்தை வெட்டியதால் மூதாட்டி ஒருவர் அழுத சம்பவம் வைரலானதால் ஊர் மக்கள் அவருக்கு புதிய மரக்கன்று வாங்கி கொடுத்தனர்.
புதிய மரக்கன்று
இந்திய மாநிலமான சத்தீஸ்கர், கைராகர் மாவட்டம் சாராகோண்டி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி தேவ்லா பாய் படேல். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக அரச மரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார்.
அந்த மரத்தில் சுவாமி சிலையை வைத்து ஊர்மக்கள் வழிபாடு செய்து வந்தனர். தற்போது, அரச மரம் இருந்த இடத்தை இம்ரான் மேமன் என்பவர் வாங்கியதோடு, அரச மரத்தையும் வெட்டியதால் கதறி அழுதுள்ளார் தேவ்லா பாய் படேல்.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்தது.
இதையடுத்து, மரம் வெட்டப்பட்ட இடத்தில் கிராமத்தினர் சிறப்பு பரிகார பூஜை செய்து வழிபட்டதோடு மூதாட்டிக்கு புதிய மரக்கன்று ஒன்றை வழங்கி, அரச மரம் வெட்டப்பட்ட இடம் அருகே நட்டு வைத்தனர்.
அதுமட்டுமல்லாமல், தேவ்லா பாய் படேலுக்கு ருத்ராட்சம் மரக்கன்றை வழங்கிய அப்பகுதி எம்எல்ஏ யசோதா வர்மா அதனை நட வைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |