70 வயதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி.., எவ்வளவு மதிப்பெண்கள் தெரியுமா?
70 வயதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி மூதாட்டி ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மூதாட்டி தேர்ச்சி
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல, மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவிகள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த ராணி என்ற 70 வயது மூதாட்டி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவருடைய கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில் தனியாக இருந்ததால் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வீட்டில் இருந்தபடியே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களை படித்து, தேர்வில் கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.
தமிழில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும் என மொத்தம் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |