பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர பயண எச்சரிக்கை
ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களிலிருந்து ஸ்பெயின் செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர பயண எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தால் இடையூறு ஏற்படலாம்
6ஆம் திகதி, திங்கட்கிழமை, ஸ்பெயினில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதால் ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களிலிருந்து ஸ்பெயின் செல்லும் பிரித்தானியர்களுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என Jet2 விமான நிறுவனம் எச்சரித்துள்ளது.
பிப்ரவரி 6ஆம் திகதி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதுடன், அடுத்த மாதம் முழுவதுமே தொடர்ந்து பயண இடையூறுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, பயணம் புறப்படுவோர் அவ்வப்போது தங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களை கவனித்து அதற்கேற்ப முடிவெடுத்துக்கொள்ளுமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Image: Craig Hastings via Getty

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.