இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்! போடவில்லை என்றால் இது தான் கதி! கனடா முக்கிய அறிவிப்பு
அரசாங்க ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
உலகளவில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் ஒன்று கனடா, 81% தகுதியுள்ள மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் போட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், எதிர்வரும் வாரங்களில் அனைத்து அரசு ஊழியர்களும், மத்திய அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்ட விமானம், ரயில்வே மற்றும் கப்பல் போன்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra அறிவித்துள்ளார்.
Vaccination is our best tool to keep each other safe and to beat COVID. That’s why our government will require all federal public servants and employees working under federally regulated air, rail, and marine transportation sectors to be vaccinated. https://t.co/0kfyaNxvjI
— Omar Alghabra (@OmarAlghabra) August 13, 2021
மேலும், தடுப்பூசி போடுவது கொரோனாவை வீழ்த்துவதற்கும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருப்பதற்கும் சிறந்த கருவியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
விமானப் பயணிகள், மாநிலங்களுக்கு இடையேயான ரயிலில் பயணிக்கும் பயணிகள் மற்றும் இரவு தங்கும் வசதி கொண்ட பெரிய கப்பலில் பயணிக்கும் பயணிகளுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என Omar Alghabra தெரிவித்துள்ளார்.
அக்டோபர் இறுதிக்குள் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.